Last Updated : 10 Feb, 2019 09:36 AM

 

Published : 10 Feb 2019 09:36 AM
Last Updated : 10 Feb 2019 09:36 AM

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய கூட்டம் நடத்தப்படவில்லை: அதிகாரிகளிடம் குறைகளை தெரிவிக்க முடியாமல் தவிப்பு

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகநல வாரியக் கூட்டம் நடத்தப்படாததால் தங்களுடைய குறைகளை தெரிவிக்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17,000, விபத்தில் மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம், மாற்றுத்திறனாளிகள் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையாக, படிக்கும் வகுப்புக்கு ஏற்றார்போல் ரூ.2,000-ல் இருந்து ரூ.7,000 உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நல வாரியத்தின் தலைவராக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மகேஸ்வரி உறுப்பினர் செயலாளராகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதிகள் உள்ளிட்ட 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் கூட்டத்தை 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல வாரி யத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் வழிமுறைகள், நல வாரியத்தில் செயல்படுத்தும் திட்டங்களில் ஏற்படும் குறைபாடுகளைக் களைய எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், மாற்றுத்திறனாளிகள் சந்திக்கக் கூடியபிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர்கள் மாற்றம்செய்யப் பட்டு, மாற்றுத்திறனாளி கள் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். எனவே, கடந்த2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்பட்டு, வாரியம் திருத்தியமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திருத்தியமைக்கப்பட்ட நல வாரியக் கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி நடந்தது. அதன்பிறகு, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நல வாரியக் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை அதிகாரிகள், அமைச்சரிடம் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்குகிறது. ஆனால், இந்தத் தொகை போதுமானதாக இல்லை. இந்தத் தொகை கூட முழுவதுமாக மாற்றுத்திறனாளிகளுக்குச் செல்வதில்லை. ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், நல வாரியத்தின் மூலம் உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தெரிவிக்க வாரியக் கூட்டம் நடத்துவது அவசியமானது. ஆனால், அதற்குக் கூட அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் நேரம் இல்லாத அவல நிலைதான் நீடிக்கிறது.

சரியான புள்ளி விவரம் இல்லைமாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் எவ்வளவு மாற்றுத்திற னாளிகள் உதவித்தொகைகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர், எவ்வளவு பேருக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன என்ற எந்தப் புள்ளி விவரமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக, மாற்றுத்திற னாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகள் நலத் திட்ட உதவிகள் பெற முடியாமல் பல விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்து இருந்தது உண்மைதான். அதன் பிறகு, கடந்த ஆண்டு ரூ.4 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உதவித்தொகை கிடைக் காத அனைவருக்கும் கொடுத்து முடித்து விட்டோம்.

கால விரயம் தவிர்ப்புமுன்பெல்லாம், நல வாரியத்தில் உதவிகளைப் பெற, தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். நாங்கள் அதை பரிசீலிப்போம். இதனால், கால விரயம் ஏற்பட்டது. தற்போது, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளே விண்ணப்பங்களைப் பரிசீலித்து உடனுக்குடன் தகுதியான விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிப்பதால் உதவித்தொகை கள் விரைவாக கிடைக்கின்றன.

நல வாரியக் கூட்டத்தை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x