Published : 20 Feb 2019 07:32 AM
Last Updated : 20 Feb 2019 07:32 AM

பாஜக - பாமகவுடன் அதிமுக அமைத்த கூட்டணி திமுகவுக்கு சாதகமாகும்: கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் கருத்து

அதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகமாகவே அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும், சமூக நீதியை நிலை நாட்டவும் பாமக தொடங்கப் பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டை வழங்கி யவர் கருணாநிதி. ஆனால், இப்போது சமூக நீதிக்கு எதிரான, மதவாத, மக்களைப் பிளவுப்படுத்தும் கொள்கை கொண்ட பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. தனது கட்சியின் கொள்கைக்கு எதிராக பாமக கூட்டணி அமைத்துள் ளது. இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: மத்திய பாஜக அரசுக்கும், மாநில அதிமுக அரசுக்கும் எதிரான அலை வீசுகிறது. பாஜக, அதிமுக அரசுகள் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதிமுக - பாஜக கூட்டணியில் தற்போது பாமக இணைந்துள்ளது. அதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகமாகவே அமையும்.

2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டி யிட்ட பாமக படுதோல்வி அடைந் தது. அதன்பிறகு பாமகவை கூட்டணியில் ஜெயலலிதா சேர்க்கவில்லை. சட்டப்பேரவை யிலேயே பாமகவை கடுமையாக விமர்சனம் செய்தார். பாமக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறாது என்பது 2009 தேர்தலி லேயே நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஜெயலலதாவின் நிலைப் பாட்டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

சுயநல கூட்டணி

இனி எந்தக் காலத்திலும் அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்த பாமக இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக மெகா கூட்டணியை அமைத்து விட்டது போன்ற மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். முழுக்க முழுக்க கொள்கையில்லாத, சுயநலக் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுக - பாஜக - பாமக கூட்டணி படுதோல்வி அடையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x