Published : 03 Feb 2019 01:26 PM
Last Updated : 03 Feb 2019 01:26 PM

அமிர்தா ரயிலுக்கு உடுமலையில் உற்சாக வரவேற்பு

திருவனந்தபுரம் - மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, உடுமலை நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

திருவனந்தபுரம் - மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ், உடுமலையில் நின்று செல்லாத நிலை இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று முதல் உடுமலையில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை வரவேற்கும் வகையில் நேற்று நடந்த விழாவுக்கு, பொள்ளாச்சி எம்.பி. சி.மகேந்திரன் தலைமை வகித்தார்.

 

பொள்ளாச்சியில் இருந்து காலை 9.30 மணியளவில் உடுமலை வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை, அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இத்தேரியா, கூடுதல் கோட்ட மேலாளர் லலித்குமார் மன்சுகனி, கோட்டாட்சியர் எஸ்.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

வருவாய் அதிகரிப்பு

 

இதுதொடர்பாக மதுரை கோட்ட சீனியர் டிவிஷ்னல் கமர்ஷியல் மேலாளர் ஹரிகிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

 

திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில்களில், கடந்த ஆண்டை காட்டிலும் பயணிகளின் எண்ணிக்கை 35 ச தவீதமும், வருவாய் 30 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை தினமும் சராசரியாக 4830 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை, நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் சராசரியாக தினமும் 6043 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலமாக 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

கடந்த ஆண்டு ரூ.3.5 லட்சம் தினசரி வருவாயாக இருந்தது. தற் போது ரூ.4.5 லட்சமாக உயர்ந்துள் ளது. இது கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் கூடுதலாகும். உடுமலை ரயில் நிலையத் தில் தினசரி வருவாய் ரூ.34,000-லிருந்து ரூ.64000-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக, உடுமலையில் மட்டும் 87 சதவீதமாக வருவாய் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16343) காலை 9.30 மணிக்கு வரும். 2 நிமிடங்கள் இடைவெளியில் மீண்டும் மதுரை நோக்கி செல்லும். மாலை 6.40 மணிக்கு (வண்டி எண்: 16344) உடுமலைக்கு வந்த பின், திருவனந்தபுரம் நோக்கி செல்லும். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க பழநி - ரூ.30, மதுரை- ரூ.50, பொள்ளாச்சி - ரூ.30, பாலக்காடு- ரூ.65, திருவனந்தபுரம் - ரூ.140 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு பெட்டிக்கான கட்டண முறை விரைவில் அறிவிக்கப்படும் என்று, ரயில்வே நிர்வாக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x