Published : 15 Jan 2019 08:26 AM
Last Updated : 15 Jan 2019 08:26 AM

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழா ஜூலையில் நடத்த திட்டம்: தேதியை இறுதி செய்ய அர்ச்சகர்களுக்கு அறநிலையத் துறை கடிதம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவை ஜூலை மாதம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சரியான தேதியை முடிவு செய்ய சில அர்ச்சகர்களிடம் ஆலோசனைக் கேட்டு அறநிலையத் துறை சார்பில் பதில் பெறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நூற்றுக்கால் மண்டபத் தின் வடக்கில் உள்ள அர்த்தபுஷ் கரணி குளத்துக்கு அடியில் நீராழி மண்டபம் உள்ளது. இந்த மண்ட பத்தினுள் அத்திமரத்தால் செய்யப் பட்ட அத்திவரதர் பெருமாள் சிலை சயன திருக்கோலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கரைக்கு வந்து பக்தர் களுக்கு காட்சி அளிப்பார். இந்த அத்திவரதர் திருவிழா கோலாகலமாக காஞ்சிபுரத்தில் நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா கடைசியாகக் கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்றது. பொது மக்கள் தரிசனத்துக்குப் பின்னர் மீண்டும் இந்தக் குளத்தில் அத்திவரதரை வைத்துவிட்டனர்.

தற்போதுள்ள 40 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் இந்தத் திருவிழாவைக் கண்டதில்லை. அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு முறை மட்டுமே கண்டதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தத் திருவிழாவை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்த இந்து சமய அறநிலையத் துறை திட்ட மிட்டுள்ளது. இதற்கான சரியான தேதியை முடிவு செய்வதற்காக முக்கிய கோயில் அர்ச்சகர்க ளுக்கு கடிதம் கொடுக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, ‘‘வைகாசி பிரம் மோற்சவத்துக்குப் பிறகு அத்தி வரதர் திருவிழா இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது. இந்த விழா ஜூலை மாதம் வருவதற் கான வாய்ப்புகளே உள்ளன. அர்ச்சகர்களின் ஆலோசனை களைப் பெற்று சரியான தேதியை முடிவு செய்ய வேண்டும் என்ப தற்காக அர்ச்சகர்களுக்கு கடிதம் கொடுத்தோம்.

புதிய பஞ்சாங்கம் வந்தபிறகு தேதியை முடிவு செய்யலாம் என்று பலர் கூறியுள்ளனர். புதிய பஞ்சாங்கம் வந்த உடன் தேதி இறுதி செய்யப்படும்’’ என்றார்.

இதுகுறித்து மேலும் சில கோயில் அலுவலர்கள், அர்ச்சகர் களிடம் கேட்டபோது, ‘‘வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்துக்குப் பின் ஆனி திருவோண விழா நடைபெறும். இதைத் தொடர்ந்தே அத்திவரதர் எழுந்தருளும் திருவிழா நடைபெற்றுள்ளது. அதன்படி ஜூலை முதல் வாரத்தில் இந்த விழா தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x