Published : 17 Jan 2019 09:44 AM
Last Updated : 17 Jan 2019 09:44 AM

சென்னையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்

தலைநகர் சென்னையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண் டாடப்பட்டது. மக்கள் கூடும் பொது இடங்களில் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத் தப்பட்டன.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை கடந்த 15-ம் தேதி தொடங்கி மாநிலம் முழுதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2-வது நாளில் கால்நடைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. அதன்படி மாட்டுப் பொங்கலான நேற்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தலைநகர் சென்னையில் திருவல்லிக்கேணி, மடிப்பாக்கம், அரும்பாக்கம், நங்கநல்லுார், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பெரும் பாலான பகுதிகளில் உள்ள மக்கள் அதிகாலை முதலே மாடுகளை அழகாக ஜோடித்து, பொங்கல் படையல் வைத்து பூஜைகள் செய்து வழிப்பட்டனர். குறிப்பாக மெரினா, பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரை பகுதிகளை ஒட்டி இருப்பவர்கள் தங்கள் மாடுகளை கடலில் குளிக்க வைத்து, வண்ண பொட்டுகளால் அவைகளை அலங்கரித்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். கடலில் பொங்கி வரும் அலைகளில் சிறிய அச்சத்துடன் மாடுகள் துள்ளி குதித்து விளையாடிய காட்சிகள் மிகவும் ரம்மியாக இருந்தன.

மாலை நேரங்களில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள் மாடுகளை அலங்கரித்து பூஜைகள் செய்து வழிபாடுகளை நடத்தி மரியாதை செய்தனர். மேலும், சிறுவர் பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்களில் விவசாயம் மற்றும் அதில் கால்நடைகளின் பங்களிப்பு, இப்போதைய நிலை, செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x