Published : 17 Jan 2019 09:26 AM
Last Updated : 17 Jan 2019 09:26 AM

102-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு: கிண்டி எம்ஜிஆர் பல்கலை.யில் நடக்கிறது

எம்ஜிஆரின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உரு வம் பொறித்த சிறப்பு நாண யத்தை முதல்வர் கே.பழனி சாமி இன்று வெளியிடுகிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள், ஆண்டு தோறும் ஜனவரி 17-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் விழா இன்று (17-ம் தேதி) கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கிண்டியில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு இன்று காலை 11 மணிக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கள், சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத் துகின்றனர். மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயத்தை முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறார்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x