Published : 17 Jan 2019 08:33 AM
Last Updated : 17 Jan 2019 08:33 AM

சேலம்- செங்கப்பள்ளி சாலை ரூ.1,931 கோடியில் 8 வழிச்சாலையாகிறது: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சேலம்- கோவையை இணைக்கும் சேலம்- செங்கப்பள்ளி 4 வழிச் சாலை மத்திய அரசு உதவியுடன் ரூ.1,931 கோடி மதிப்பில் 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப் படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் அண்ணா பூங்கா வளாகத் தில் சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்ட முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் ஆட்சியர் ரோஹிணி வரவேற்றார். அமைச்சர் கள் உதயகுமார், சரோஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மணி மண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து சேலத்தை அடுத்த மகுடஞ்சாவடியில், சேலம்- கோவை 4 வழிச்சாலையில் உள்ள அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடி யில் தலா ரூ.45 கோடி செலவில் இரு உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

சேலம் மற்றும் மகுடஞ்சாவடி விழாவில் முதல்வர் பேசியதாவது: இரு பெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித் துக் கொண்டு மக்களுக்காக இரவு, பகல் பாராமல் உழைத்தனர். குடும் பம் என்று சொன்னால் அது மக்கள் தான் என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்த தலைவர்களு டைய முழு உருவ வெண்கலச் சிலைகளைத் திறப்பதை நான் இறைவன் கொடுத்த பாக்கியமாக கருதுகின்றேன். மணிமண்டபம் அமைந்துள்ள ஓமலூர் சாலைக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சாலை என்று பெயர் சூட்டப்படும்.

இருபெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை எவ்வளவு தடை கள், இன்னல்கள், இழிச்சொற்கள், பழிச்சொற்கள் வந்தாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து, உங்கள் துணையோடும், இரு பெரும் தலைவர்களுடைய ஆசியோ டும் இந்த அரசு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எத்தனை முறை, எத்தனை கிராமங்களுக்கு சென்றி ருப்பார். கிராம மக்களுக்காக என்ன திட்டங்களை செய்தார். எதிர்க் கட்சி தலைவராக 3 ஆண்டுகளாக இருந்தபோது, ஏதாவது கிராமத்துக்கு சென்று, மக்களை சந்தித்தாரா? இப்போது தேர்தல் வந்துவிட்டதால், கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்திப்ப தாக ஏமாற்றுகிறார்.

நான் எம்எல்ஏ-வாக இருந்த போதும், தற்போதும் சேலம் மாவட்டத்தில் செல்லாத கிராமமே கிடையாது. கிராம மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். விவசா யிகள் பயன்பெற வேண்டும் என்ப தற்காக, தலைவாசலில் இந்தியாவி லேயே மிகப்பெரிய அனைத்து வகை கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. கோவையை இணைக்கும் சேலம்- செங்கப்பள்ளி இடையிலான 4 வழிச்சாலை 103 கிமீ தூரம் உள் ளது. இச்சாலை மத்திய அரசு உதவியுடன் ரூ.1,931 கோடியில் 8 வழிச்சாலையாக தரம் உயர்த்தப் படும். இந்தியாவில் சாலை சீரமைப் புப் பணியில் தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே, திட்டமிட்டு பொய்யான, செய்தியை பரப்பி வருகின்றனர். அத்தனையும் உங்களின் மகத் தான ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x