Published : 13 Jan 2019 09:36 AM
Last Updated : 13 Jan 2019 09:36 AM

‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய திருவிழா: கருணாநிதிக்கு இன்று நினைவஞ்சலி- விருது விழா, உரையாடல்களும் நடக்கின்றன

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ மூன்று நாள் இலக்கிய விழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பாராவ் ஹாலில் நேற்று தொடங்கியது. இந்த விழா 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது.

2-ம் நாளின் முக்கிய அமர்வுகள்

பிரதான அரங்கான ஸ்ரீ முத்தா கான்சர்ட் ஹாலில் ரீட்ரேஸிங் மேப்ஸ் இன் ஸேர்ச் ஆஃப் லாங்வேஜ் அன் இல்லஸ்ட்ரேட்டட் லெக்சர் (Retracing Maps in Search of language An Illustrated lecture) என்ற தலைப்பில், காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டவர்கள் பற்றிய ஓவியங்கள், கவிதைகள் பற்றி குஜராத்தைச் சேர்ந்த நீலிமா ஷேக் மாலை 6.10-க்கு உரையாடுகிறார்.

இந்து பெவிலியன் அரங்கில் மாலை 3.50-க்கு தொடங்கும் நிகழ்வில் கவிஞர் சேரன் உடனான உரையாடலை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஒருங்கிணைக்கிறார்.

தி இந்து ஷோபிளேஸ் அரங்கில் காலை 10 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலி நடக்கிறது. மருத்துவர் நா.எழிலன், ‘இந்து’ என்.ராம் பங்கேற்க, திமுக எம்.பி. கனிமொழி ஒருங்கிணைக்கிறார்.

பகல் 12 மணிக்கு தொடங்கும் அமர்வில் மேற்கு மற்றும் தென் தமிழக உணவு பற்றி எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், நாஞ்சில் நாடன் உரையாடுகின்றனர். ஹரிகிருஷ்ணன் சங்கரன் இதை ஒருங்கிணைக்கிறார்.

தி ஸ்லேட் அரங்கில் மாலை 4.15-க்கு தொடங்கும் ‘வேர்ட்ஸ் டேக் விங்க்ஸ்’ என்ற அமர்வில், அம்பேத்கரின் நினைவுகளை நாடக மாக்கிய சுஷாமா தேஷ்பாண்டே, சாதத் ஹசன் மண்டோ கதைகளை நாடகமாக்கிய நீலம் மான்சிங், அனாமிகா ஹக்ஸர் பங்கேற்கின் றனர்.

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விருது விழா பிரதான அரங்கில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழா மேடையில் விருதாளர்கள் பெயர் அறிவிக்கப்படும். புனை வெழுத்துக்கான பரிசை ‘இந்து’ என்.ரவியும், புனைவற்ற எழுத் துக்கான பரிசை வரலாற்று ஆசிரியர் ராஜ்மோகன் காந்தியும் வழங்குவர். ‘தி இந்து யங் வேர்ல்டு குட்புக்ஸ்’ விருதுகளை அமெரிக்க நாவலாசிரி யர் டேனியல் ஹாண்ட்லர் வழங்கு கிறார். அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி இலவசம்.‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விருது விழா பிரதான அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x