Published : 17 Jan 2019 09:47 AM
Last Updated : 17 Jan 2019 09:47 AM

மின்சார ரயில்களின் சேவை ரத்து

தெற்கு ரயில்வே நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்ட்ரல் - சூளூர்பேட்டைக்கு வரும் 17, 18, 21, 22-ம் தேதிகளில் இரவு 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சூளூர்பேட்டை - சென்ட்ரலுக்கு வரும் 17, 18, 21, 22-ம் தேதிகளில் இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலின் சேவை ரத்து செய்யப் படுகிறது.

மேலும், தன்பாத் - ஆலப் புழா விரைவு ரயில் (13351) கவரப்பேட்டைக்கு 115 நிமிடங் கள் தாமதமாக வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x