Published : 09 Jan 2019 08:08 AM
Last Updated : 09 Jan 2019 08:08 AM

பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகள் தொடங்க அனுமதிக்கலாமா?- கல்வியாளர்கள் இடையே முரண்பட்ட கருத்து

பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க ஏஐசிடிஇ முடிவு செய்திருப்பதற்கு கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது அரசு பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால், தனியார் பொறியியல் கல்லூரிகளின் வருகைக்குப் பின்பும் அக்கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகிய பின்பும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இருந்தாலே போதும். இடம் கிடைத்துவிடும்.

ஆனால், சமீப காலமாக பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகள் (பிஏ, பிஎஸ்சி, பிபிஏ, பிகாம்) தொடங்குவதற்கு அனுமதி அளிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது. ஏஐசிடிஇ-யின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் கலைஅறிவியல் படிப்புகள் தொடங் குவது அபத்தமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஏஐசிடிஇ-யின் புதிய முடிவு தொடர்பாக கல்வியாளர்கள் தெரி வித்த கருத்துகள் பின்வருமாறு:சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக்: ஏஐசிடிஇ-யின் முடிவு வரவேற்கத்தக்கது. குறைந்த மாணவர் சேர்க்கையால் பயன் படுத்தப்படாமல் இருக்கும் பொறி யியல் கல்லூரிகளின் ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி களை பயன்படுத்தக்கூடிய சூழல்ஏற்படுவது நல்ல விஷயம் தானே! ஆனால், இந்த புதிய நடைமுறையை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

அடிப்படையில் பொறியியல் பாடம் என்பது தொழில்சார்ந்த படிப்பாகவும், கலை அறிவியல் படிப்புகள் சாதாரண படிப்பாகவும் கருதப்படுகிறது. ஒரே கல்லூரியில் படித்தாலும் கலை அறிவியல் மாணவர்களுக்கு சற்று தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். எனவே, இரண்டு படிப்புகளுக்கும் தனித்தனி பிரிவுகள், தனித்தனி விடுதி வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன்: மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது, உள்கட்டமைப்பு வசதி பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது என்ற காரணத்துக்காக பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகள் தொடங்க அனுமதிப்பது என்பது நல்ல யோசனை அல்ல.

இது ஏதோ உள்கட்டமைப்பு வசதி சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. பொறியியல் கல்லூரிகளில் தரமான ஆசிரியர்கள் கிடையாது. கலை அறிவியல் படிப்புகள் வழங்கப்பட்டாலும் தரமான ஆசிரியர்கள் வேண்டுமே. இது போன்ற பொறியியல் கல்லூரிகளை திறன் மேம்பாட்டு மையங்களாக மாற்றலாம். குறிப்பிட்ட துறையில் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் ஐ.அருள் அறம்: இதுபோன்று பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டால் அது, கல்லூரி நிர்வாகத்தினர் பொறியியல் படிப்பைப் போன்று அதிக கட்டணம் வசூலிப்பதற்கு வழிவகை செய்யும். பொதுவாக கலை அறிவியல் படிப்புகளுக்கு குறைந்த கல்விக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

கல்விக் கட்டணம் உயரும்பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகள் நடத்தப்பட்டால் கண்டிப்பாக அதற்குஅதிக கட்டணம் வசூலிப்பார்கள். மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. ஆய்வகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் பயன்படுத் தப்படாமல் இருக்கிறதே என்றுபொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் கவலைப்பட்டால் அந்த பொறியியல் கல்லூரியை அப்படியே கலை அறிவியல் கல்லூரியாக மாற்றிவிட்டு அங்கு தாராளமாக கலை அறிவியல் படிப்புகளை வழங்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x