Published : 06 Jan 2019 08:07 AM
Last Updated : 06 Jan 2019 08:07 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு, ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட 6 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். ரேஷன் கடை கள் மூலம் இவை நாளை முதல் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர் கள் மற்றும் முகாம்களில் தங்கி யுள்ள இலங்கை தமிழர் குடும்பங் களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த டிசம்பர் 22-ம் தேதி அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்பங்கள் பயன்பெறும் வகை யில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய 6 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கலுக்கு முன்னரே ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இதற்காக தமிழக அரசு ரூ.258 கோடி ஒதுக்கியது. மேலும், முந்திரி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்து, பொட்டலமிட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆளுநர் உரையில் அறிவிப்பு

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. 2019-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை யாற்றினார். அப்போது, ‘‘தமிழகம் முழுவதும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழக அரசால் ரூ.1,000 வழங்கப்படும். திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள தால், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொகை வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர் கள் மற்றும் முகாம்களில் தங்கி யுள்ள இலங்கை தமிழர் குடும் பங்கள் என 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்பங்களுக்கு 6 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் திருவாரூர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள 1 கோடியே 97 லட்சத்து 98,102 குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கத் தொகை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது.

சென்னை தலைமைச் செய லகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் வர் பழனிசாமி, 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கி திட் டத்தை தொடங்கி வைத்தார். அப் போது, தமிழக மக்கள் அனைவருக் கும் தைப்பொங்கல் வாழ்த்து களை முதல்வர் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.காமராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உணவுத் துறை செயலர் தயானந்த் கட் டாரியா, உணவுப்பொருள் வழங் கல் ஆணையர் மதுமதி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டத்தை முதல்வர் நேற்று தொடங்கி வைத்த நிலையில், 7-ம் தேதி (நாளை) முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை பகுதி வாரியாக பிரித்து வழங்கப் பட உள்ளன.ரேஷன் கடைகளில் நாளை முதல் விநியோகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x