Published : 16 Sep 2014 10:55 AM
Last Updated : 16 Sep 2014 10:55 AM

2016-ல் கருணாநிதி தலைமையில்தான் ஆட்சி: திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

திமுக சார்பில் சென்னையில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில் கருணாநிதி பேசியதாவது:

இந்த இயக்கத்தை வழிநடத்தும் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் இதன் வெற்றிக்காக பாடுபட வேண்டும். எனது உடல்நிலை மோசமாக உள்ள நிலையிலும் எவ்வளவு பேச முடியுமோ அந்த அளவுக்கு பேச வேண்டும் என உங்கள் முன் அமர்ந்துள்ளேன். பெரியார், தியாகராயர் போன்றோர் வகுத்த இன மான தத்துவத்தை நிறை வேற்ற இந்த இயக்கம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது.

ஆனாலும் அண்ணா, பெரியார் போன் றோரின் கருத்துகள், உணர்வுகள் வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் பெருமூச்சு விடும் நிலைதான் உள்ளது. தமிழகத்தில் எதற்காக பாடுபட்டோமோ அதற்கான வெற்றி கிடைக்கவில்லை. சாதியின் பெயரால் எந்தப் பிரிவினைகளும் கூடாது என பாடுபட்டாலும், சாதிப் பேய் தலைவிரித்தாடுகிறது. தீண்டாமை நிலை இன்னும் உள்ளது.

இந்த நிலையை மாற்ற இளைய தலைமுறை உழைக்க வேண்டும். தமிழனாய் வாழ்வோம், தமிழ் மொழியை காப்போம் என சூளுரைப்போம். தற்போது ஜனநாயகம் அழிந்து பணநாயகம் கோலோச்சி நிற்கிறது. இந்த நிலையை மாற்றி சர்வாதிகாரத்துக்கு இடம் தராத சூழலை உருவாக்க பாடுபட வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருணாநிதி தலைமையில் ஆட்சி

திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சில ஏடுகள் கங்கணம் கட்டிக் கொண்டு பிழைப்பு நடத்தும் வகையில் திமுகவுக்கு எதிராக செய்தி கள் வெளியிட்டு வருகின்றன. எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுகவை சீர்குலைக்க முடியாது. அண்ணா காலத்தில் இருந்தே இதற்கு திட்டமிட்டார்கள். அண்ணாவையும், சம்பத்தையும் பிரித்தார்கள். தலைவரை யும், நாவலரையும் பிரித்தார்கள். பின்னர் வைகோவும் பிரிந்து சென்றார். திமுக என்ன அழிந்துபோகக் கூடியதா? கருணா நிதி தலைமையில் கம்பீரமாக இருக்கிறது.

எனக்கும், தலைவருக்கும் (கருணாநிதி) பிரச்சினை என செய்தி வெளியிடுகின்றனர். என்னைப் பொறுத்த வரை தலைவர்தான் இயக்கம். அவர் இல்லை என்றால் திமுகவும் இல்லை, இந்த நாடும் இல்லை, இந்த பத்திரிகைகளும் இல்லை.

எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பட வில்லை. 2016-ம் ஆண்டில் கருணாநிதி தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமைய உள்ளது. எனவே, கட்சி யினர் யாரும் பத்திரிகைகளில் வெளி யாகும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x