தமிழகத்தில் 15% உணவகங்கள் மூடல் - கள்ளச்சந்தையில் சிலிண்டர் ரூ.6,000-க்கு விற்பனை

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு
தமிழகத்தில் 15% உணவகங்கள் மூடல் - கள்ளச்சந்தையில் சிலிண்டர் ரூ.6,000-க்கு விற்பனை
Updated on
1 min read

சென்னை: வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்டர் தட்​டுப்​பாட்​டால், தமிழகத்​தில் 15 சதவீதம் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ள​தாக தமிழக ஹோட்​டல் உரிமை​யாளர்​கள் சங்​கம் தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்​ளச்​சந்​தை​யில், வணிக சிலிண்டர் விலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்​துள்​ளது. ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் தீவிரத்​தால், மத்​திய கிழக்கு நாடு​களில் எண்​ணெய் மற்​றும் எரிவாயு உற்​பத்​தி, விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், திரவ பெட்​ரோலி​யம் எரி​வாயு (எல்​பிஜி) விநி​யோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்​டருக்கு முன்​னுரிமை அளிப்​ப​தற்​காக, வர்த்தக சிலிண்டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக, சென்னை உட்பட பல நகரங்​களில் உணவு​களை தயாரித்து வழங்​கும் ஹோட்டல்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

ஹோட்​டல்​களில் விற்​கப்​படும் உணவு வகை​களின் எண்​ணிக்​கை​யும் குறைக்​கப்பட்​டுள்​ளது. இதுத​விர, வணிக சிலிண்டர் இல்​லாத​தால், ஓட்​டல்​களும் மூடப்​பட்​டுள்​ளன.

215 ஹோட்டல்கள் மூடல்

இந்​நிலை​யில், தமிழகத்​தில் 15 சதவீதம் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ள​தாக தமிழக ஹோட்​டல் உரிமை​யாளர்​கள் சங்​கம்தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, அச்​சங்கம் தரப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்டர் தட்​டுப்​பாடு காரண​மாக, சென்​னை​யில் 215 சிறிய மற்​றும் நடுத்தர ஹோட்​டல்​கள் மூடப்​பட்​டுள்​ளன. பெரிய அளவி​லான ஹோட்​டல்​கள் விறகு மற்​றும் மின்​சார அடுப்​பு​களுக்கு மாறி​யுள்​ளன. சென்னை தவிர்த்து பிற நகரங்​களில் பெரும்​பாலானோர் மாற்று எரிபொருளுக்கு மாறி​யுள்​ளனர்.

மேலும் காஸ் சிலிண்​டர் வரு​கை​யைப் பொருத்து அவ்​வப்​போது ஹோட்​டல்​களை திறப்​பதும், உணவு வகைகளை கணிச​மாக குறைத்​தும் விற்​பனையை மேற்​கொள்​கின்​றனர் தமிழகத்​தில் இது​வரை தோராய​மாக 300-க்​கும் மேற்​பட்ட உணவுக் கடைகள் அதாவது மொத்​தம் உள்ள கடைகளில் 15 சதவீதம் என்ற அளவில் மூடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அச்​சங்​கத்​தின் தெரி​வித்​துள்​ளனர்.

கள்​ளச்​சந்​தை​யில் ரூ.6 ஆயிரம்

வர்த்தக சிலிண்டர்கள் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், கள்​ளச்​சந்​தை​யில் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்டர்கள் மிக அதிக விலைக்கு விற்​கப்​படு​கின்​றன.

சென்​னை​யில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்​பாட்​டுக்​ கான சிலிண்டர் விலை ரூ.2,043.50 ஆகும். இது தற்​போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை கள்​ளச்​சந்​தை​யில் கிடைக்​கிறது.

தேநீர்​ கடை உரிமை​யாளர்​ ஒருவர்​ கூறுகையில் “வணிக பயன்​பாட்​டுக்கான சிலிண்டர் கிடைக்​க​வில்​லை, கள்​ளச்​சந்​தை​யில் இந்த சிலிண்டர் அதிக விலைக்கு விற்​கப்​படு​கிறது. எனவே மின் அடுப்​புக்கு மாறி​விட்​டோம். மேலும் வடை, பஜ்ஜி, சமோ​சா, போண்டா போன்​றவற்றை தயாரிப்​பதை நிறுத்​தி​விட்​டோம்” என்று தெரிவித்​தார்​.

தமிழகத்தில் 15% உணவகங்கள் மூடல் - கள்ளச்சந்தையில் சிலிண்டர் ரூ.6,000-க்கு விற்பனை
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in