Published : 06 Dec 2018 08:25 AM
Last Updated : 06 Dec 2018 08:25 AM

அப்போலோவில் தம்பிதுரை அனுமதி 

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை நெஞ்சுவலி காரண மாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் குழுவினர் பரி சோதனை செய்து, உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த எம்பி-க் கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு, தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே காரில் மருத்துவமனைக்கு சென்றனர்.

டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கும் தம்பிதுரையை பார்த்து நலம் விசாரித்தனர். பின்னர், அவரது உடல்நிலை பற்றியும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர் களிடம் கேட்டறிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x