Published : 13 Nov 2018 10:09 AM
Last Updated : 13 Nov 2018 10:09 AM

தீபாவளி சிறப்பு ரயில்களால் ரூ2.72 கோடி வருவாய்

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த தீபாவளி பண்டிகையின்போது, 20 சுவிதா மற்றும் 16 சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் உட்பட மொத்தம் 36 சிறப்பு ரயில்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டன. 100 சதவீத இருக்கைகளும் நிரம்பின. இந்த சிறப்பு ரயில்களில் மட்டும் மொத்தம் 27 ஆயிரத்து 80 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2 கோடியே 72 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x