Published : 24 Nov 2018 09:03 AM
Last Updated : 24 Nov 2018 09:03 AM

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய  சிட்டா அடங்கலுக்கு பதில் சான்றிதழ் விநியோகம்: நவம்பர் 30-ம் தேதி வரை வழங்க வேளாண் துறை ஏற்பாடு 

சென்னை

தமிழகத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிர் களை பதிவு செய்ய, அடங்கலுக்கு பதில் வேளாண் உதவி அலுவலர் மூலம் சான்றிதழ் வழங்க வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஒவ் வொரு பயிருக்கும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த காலக்கெடுவுக்குள் விவ சாயிகளால் பதிவு செய்யப்படும் பயிர் பரப்பு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.

வழக்கமாக பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் தங்கள் பயிர் பரப்பை சேர்க்க வேண்டும் என்றால், கிராம நிர்வாக அலு வலரால் வழங்கப்படும் அடங்கல் சான்று அவசியம். தற்போது இ-அடங்கல் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது என்றாலும், அதை பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரால் சரிபார்க்கப்பட்ட பின்னரே விவசாயிகள் எடுக்க முடியும்.

இந்நிலையில், இந்த 2018-19-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிர்களை பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க நவம்பர் 30-ம் தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற் குப்பின் சேர்க்க முடியாது.

ஆனால், தமிழகத்தில் கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக் கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங் களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மாநிலம் முழு வதும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் வரவழைக்கப்பட் டுள்ளனர். இதனால், பயிர்க் காப் பீட்டுக்கு அடங்கல் சான்று வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாற்று ஏற்பாடு களை வேளாண்துறை செய்துள் ளது. இது தொடர்பாக வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணா மூர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிடுதல், சேதமடைந்த பகுதி களை சீரமைத்தல் ஆகியவற்றில் மாநிலத்தின் பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் சம்பா அல் லது தாளடி அல்லது பிசான பருவத்தில் பயிரிடப்பட்டு வரும் நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடங்கல்களை பெறு வதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30-ம் தேதி முடிகிறது. இதனால், பல்வேறு விவசாய சங்கங்கள் முறையிட்டதை தொடர்ந்து, நவ.22-ம் தேதி, சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர்கள் வழங்கும் சாகுபடி சான்றிதழை கொண்டு காப்பீடு செய்ய சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் இசைவு பெறப்பட்டது.

இதை தொடர்ந்து, பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவம்பர் 30-ம் தேதி வரை காப்பீடு செய்யப்பட உள்ள சம்பா, தாளடி அல்லது பிசான நெற்பயிரை பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடங்கலுக்கு பதில், வேளாண்மை உதவி அலுவலர்களால் வழங் கப்பட உள்ள சாகுபடி சான்றிதழை கொண்டு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், காப்பீட்டு நிறுவன முகவர்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த உத்தரவு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் இணை இயக்குநர்கள், இந்திய வேளாண் காப்பீட்டுக்கழகம், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு, சோழமண்டலம் பொது காப்பீட்டுக்கழகம், ஐசிஐசிஐ வங்கி ஆகியோருக்கு அனுப்பப் பட்டுள்ளது.

அத்துடன், உதவி வேளாண் அலுவலர் வழங்கும் சான்றுக்கான படிவத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார்.புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மாநிலம் முழுவதும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x