Published : 02 Oct 2018 09:04 AM
Last Updated : 02 Oct 2018 09:04 AM

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ‘அனிமேஷன் வீடியோ’: உலகில் முதல்முறையாக கோவையில் வெளியீடு

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர் வுக்காக உலகிலேயே முதல் முறையாக கோவையில் அனிமேஷ னுடன் கூடிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உரு வாக்கப்பட்டுள்ள இந்த வீடி யோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளி யிட, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக் கட்டளை இணை நிர்வாக அறங் காவலர் டி.எல்லஷ்மி நாராயணசாமி பெற்றுக்கொண்டார். இதில், மைய இயக்குநர் டாக்டர் பி.குகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து டாக்டர் பி.குகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: `பிங்க் மாதம்` என்று அழைக்கப் படும் அக்டோபர் மாதம் ஆண்டு தோறும் சர்வதேச மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதை யொட்டி, உலகிலேயே முதல்முறை யாக அனிமேஷனுடன் கூடிய விழிப் புணர்வு வீடியோ வெளியிடப்பட் டுள்ளது.

சாதாரண மக்கள் மார்பகப் புற்றுநோய் குறித்து தெரிந்துகொள் ளும் வகையிலும், அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையிலும், ஒரு டாக்டரும், நோயாளியும் உரையாடுவதுபோல இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன, அதன் காரணங்கள், வெவ் வேறு நிலைகள், அறிகுறிகள், ஆரம்ப நிலையில் கண்டறியும் வழிமுறைகள், அதன் முக்கியத் துவம், பரிசோதனைகள், பலதரப் பட்ட சிகிச்சை முறைகள், வரும் முன் தடுக்கும் வழிமுறைகள், மார்பகப் புற்றுநோய் முழுவதும் குணமாகி, ஆரோக்கியத்துடன் இருப்பவர்களின் அனுபவங்கள் ஆகியவை தனித்தனி வீடியோக் களாக தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் என 2 மொழிகளிலும், தலா அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் வகை யில் இந்த வீடியோ உருவாக்கப் பட்டுள்ளது.

இதை www.breastcancersrior.com என்ற இணையதளத்தில் பார் வையிடலாம். மேலும், வீடியோ வில் வரும் கதாபாத்திரங்களின் படங்கள் தனியே பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும் பும் பெரு நிறுவனங்கள், தன்னார் வத் தொண்டு நிறுவனங்கள், மகளிர் மன்றங்கள், சுயஉதவிக் குழுக்கள், வங்கிகள், தொழிற்கூடங் கள் உள்ளிட்டவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு, இந்தப் படங்களை இலவசமாகப் பெற்று, தங்கள் இடத்தில் நிற்கவைத்து, விழிப் புணர்வை ஏற்படுத்தலாம்.

புற்றுநோயைப் பொறுத்தவரை யில் ஆரம்ப நிலையிலேயே கண்ட றிந்தால், உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும். இதற்காக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கையேடுகளை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மூலம் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட் டங்களில் பொதுமக்களிடையே விநியோகிக்கவும் ஏற்பாடு செய்துள் ளோம். மேலும், கோவை ராம கிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தில், 35 வயதுக்கும் மேற் பட்ட பெண்களுக்கு வரும் 31-ம் தேதி வரை இலவசமாக மேமோ கிராம் பரிசோதனை செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x