Published : 08 Aug 2014 09:44 AM
Last Updated : 08 Aug 2014 09:44 AM

அம்மா திரையரங்குகளுக்கு காலி நிலம் தேடும் பணி தீவிரம்

சென்னையில் அம்மா திரையரங் கங்கள் கட்ட காலியிடங்கள் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ஒரு அம்மா திரையரங்கம் கட்டுவதற்கு இடங்கள் தேடப்பட்டு வருகின்றன.

மலிவு விலையில் திரைப்படங் கள் காண சென்னையில் அம்மா திரையரங்கங்கள் அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மல்டிபிளெக்ஸ்-கள் வந்த பிறகு, திரைப்படங்களை காண்பது ஏழை எளியோருக்கு சாத்தியமில்லாமல் ஆகி விட்டது என்று கூறி அம்மா திரையரங்கங்களை பலர் வரவேற்றனர்.

ஆனால், மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தராமல் திரையரங்கங்கள் கட்ட வேண்டுமா என்று ஒருபுறம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அம்மா திரையரங்கங்களை அமைக்க காலியிடங்களை தீவிர மாக தேடி வருகிறது சென்னை மாநாகராட்சி. விரிவாக்கப்பட்ட இடங்களில் இருக்கும் அளவுக்கு நகரத்தில் இடம் இல்லை என்றாலும் காலியிடங்களில் மட்டுமே அம்மா திரையரங்கம் கட்டப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது.

இது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறுகையில், “சுமார் 6 கிரவுண்ட் நிலம் காலியாக உள்ள இடங்களில்தான் அம்மா திரையங்கம் அமைக்கப் படும். சமூக நலக் கூடங்களில் அவை அமைக்கப்படாது. ஏசி, கார் நிறுத்தும் வசதி கொண்டு திரையரங்கங்கள் அமைக்க அனைத்து மண்டலங்களிலும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன,” என்றார். ஏற்கெ னவே, சோழிங்கநல்லூர் மண்டலத் தில் அம்மா திரையரங்கம் அமைக்க கடந்த மாதம் இடம் ஆய்வு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x