Last Updated : 18 Oct, 2018 11:12 AM

 

Published : 18 Oct 2018 11:12 AM
Last Updated : 18 Oct 2018 11:12 AM

தமிழக அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது: சான்றிதழ் படிப்பு முடித்த மருத்துவர்கள் மயக்க மருத்துவர்களாக நியமனம்; ஏழை நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என குற்றச்சாட்டு

உலக மயக்கவியல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. வலியில்லா அறுவை சிகிச்சைக்கு முக்கிய காரணமாக மயக்க மருத்துவம் திகழ்கிறது. மயக்க மருத்துவர் இல்லாமல் அறுவை சிகிச்சை இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மயக்க மருத்துவர்களுக்கு பற்றாக் குறையான நிலை காணப்படுகிறது. இதனால், அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் பல நாட்கள் காத் திருக்க வேண்டி உள்ளது. உடன டியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாததால் நோயாளிகள் உயி ரிழக்கும் பரிதாபமும் நடக்கிறது.

மயக்க மருத்துவர்களின் பற்றாக் குறையை போக்கும் வகையில், எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு மயக்க மருத்துவம் குறித்த சான்றி தழ் படிப்பை தமிழக அரசு வழங்குகிறது.

இந்த படிப்பை முடிப்பவர்கள் மயக்க மருத்துவர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுகின்றனர்.

மயக்க மருத்துவத்தில் முது கலை பட்டயப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற் றும் மயக்க மருத்துவர்கள் இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். இதுகுறித்து அவர் கள் கூறியதாவது:

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் 100 பேர் இருந்தால், அதற்கு இணையாக மயக்க மருத்து வர்களும் 100 பேர் இருக்க வேண் டும். ஆனால், தற்போது 50 மயக்க மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் புதிது புதிதாக சிறப்பு பிரிவுகள் தொடங்கப்படுவதால், மயக்க மருத்துவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், எம்பிபிஎஸ் முடிக்கும் பலரும் மயக்க மருத்துவம் படிக்க முன்வரு வது இல்லை. ஏனென்றால், பொது மருத்துவர் அளவுக்கு இதற்கு புகழ், கவுரவம் கிடைக்காது என்று கருது கின்றனர்.

தவிர, மயக்க மருத்துவர் பணி மிகவும் சிக்கலானது. அறுவை சிகிச்சை செய்வது மற்ற துறை மருத்துவர்களாக இருந்தாலும், நோயாளியின் உயிரை காப்பாற் றும் பொறுப்பு மயக்க மருத்து வருக்குதான் இருக்கிறது. நோயா ளிக்கு எந்த நேரத்தில், எவ்வளவு மயக்க மருந்து கொடுப்பது, செயற்கை சுவாசம் அளிப்பது, இயல்பு நிலைக்கு கொண்டு வரு வது போன்ற அனைத்தும் மயக்க மருத்துவருக்குத்தான் தெரியும்.

நாங்கள் எம்பிபிஎஸ் முடித்து, மயக்க மருத்துவத்தில் முதுகலை பட்டயப் படிப்பு அல்லது பட்ட மேற் படிப்பு படித்துவிட்டு பணியாற்றுகிறோம். அப்படியும் சிகிச்சையின்போது சில நேரங் களில் எதிர்பாராதவிதமாக நோயா ளிகள் இறந்துவிடுகின்றனர்.

ஆனால், மயக்க மருத்துவர் களின் பற்றாக்குறையை போக்குவ தாக கூறும் தமிழக அரசு, எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு வெறும் 3 மாதங் கள் மட்டும் சான்றிதழ் படிப்பை சொல்லிக் கொடுத்து அரசு மருத்துவ மனைகளில் நியமனம் செய்கி றது. இதுபோல கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக நடக்கிறது. மயக்க மருத்துவம் குறித்து 3 ஆண்டுகள் படிப்பதும், 3 மாதங்கள் படிப்பதும் எப்படி சமம் ஆகும்?

3 ஆண்டுகள் படிப்பதை 3 மாதங் களில் படித்துவிட்டு, மயக்க மருத்து வம் பார்க்க வருவது, நோயாளி களின் உயிருக்கு ஆபத்தாக முடி யும். உரிய தகுதி இல்லாத இதுபோன்ற மயக்க மருத்துவர் கள் கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். சிசேரியன் உள்ளிட்ட சிகிச்சையின் போது இவர்கள் மயக்க மருந்து கொடுப்பதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து அர சிடம் பலமுறை கூறிவிட்டோம். ஆனால், மயக்க மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்க இதுபோல் செய்வதாக அரசு தரப் பில் கூறப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* மத்திய அரசு அங்கீகாரம்

இந்த புகார் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் பணியாற்றும் மயக்க மருத்துவர்கள் மற்ற ஊர்களில் பணியாற்ற அழைத்தால் வருவதில்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் பணியாற்ற ஒருவர்கூட முன்வருவதில்லை. இதனால், கிராமபுறங்களில் மயக்க மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால்தான் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு மயக்க மருத்துவம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. எம்பிபிஎஸ் படித்தாலே பெரும்பாலும் எல்லா மருத்துவமும் பார்க்கலாம்.

மேலும், அவர்கள் சொல்வது போல இது 3 மாதப் பயிற்சி அல்ல. இது 6 மாதப் பயிற்சியாகும். மத்திய அரசால் இது அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

எனவே, ‘இவர்களுக்கு ஒன்றும் தெரியாது’ என்று கூறுவது தவறு. இவர்கள் தகுதியானவர்களே.

அவசர காலத்தில் சிசேரி யன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது மட் டுமே இவர்கள் பயன்படுத்தப்படு கின்றனர். இவர்கள் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, 1 லட்சத்துக்கும் அதிகமான சிசேரியன் செய்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் மருத்துவர்களுக்கு பதிலாக, செவிலியர்தான் மயக்க மருந்து கொடுக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x