Published : 15 Aug 2018 09:25 AM
Last Updated : 15 Aug 2018 09:25 AM

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தபடி 300 அரிய வகை தாவரங்களுடன் தயாராகும் மரப்பூங்கா: வண்டலூரில் நாளை திறக்கப்படுகிறது

வண்டலூரில் வனத்துறை சார்பில் ரூ.2 கோடியில், 300 வகையான மரங்களுடன் மரப்பூங்கா தயாராகி வருகிறது. நாளை(ஆக.16) இந்த புதிய பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபையில், விதி எண் 110-ன் கீழ் மரப்பூங்கா அமைப்பது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், சென்னையை அடுத்துள்ள வண்டலூர், அறிஞர் அண்ணா உயி ரியல் பூங்கா அருகே, வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் உள்ள வன ஆராய்ச்சி பிரிவு மூலமாக வன மரபியல் வளங்களைப் பாதுகாக்க, 8 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வளர்ந்து வரும், 300 மரத்தாவர வகைகள் ஒரே இடத்தில் வளர்க்கப்பட்டு, மரபியல் வளங் கள் கொண்ட மரப்பூங்கா ஏற் படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த மரப்பூங்கா மரபியல் வளங்களைப் பாதுகாப்பதுடன், தாவரவியல் வல்லுநர்களின் சொர்க் கமாகவும் திகழும். இந்த மரப் பூங்கா, ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என அறிவிக் கப்பட்டது. அதன்படி தற்போது வரை பணிகள் நடைபெற்று வருகின்றன.

வண்டலுார் மலையில் இருந்து வெளியேறும் மழைநீர், கால்வாய் வழியாக மரப்பூங்கா உள்ளே சென்று நெடுங்குன்றம் ஏரியில் கலக்கிறது. இந்த கால்வாயில், நான்கு தடுப்பணைகள் கட்டப் பட்டுள்ளன. இதில் தண்ணீரைத் தேக்கி, மரங்களுக்கு பாய்ச்சவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தாவ ரங்களின் செயல் விளக்கக் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கையான நீரூற்று, இருக்கை வசதி போன்ற வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன. பூங்காவில் ஒவ் வொரு தாவரம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மரப்பூங்கா, பொதுமக்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவி யாக இருக்கும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றிப் பார்க்க யு-வடிவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ருத்ராட்சம், சந்தனம், செம்மரம், வெடிப்பலா, வில்வம், கடுக்காய், நெல்லி, பலா, பன்னீர், இரும்பு, ஈட்டி, புன்னை, செண்பகம், எட்டி, வெண்தேக்கு, மயிலடி, மயிர் மாணிக்கம், மலையாத்தி, வேம்பு, பாதிரி, மாவிலங்கம், வேங்கு, இலுப்பை, கருங்காலி, கொடுக்காய்ப்புளி, செங்கடம்பு, தவிட்டுக்கொய்யா, தும்புலிமரம், நாவல், நீர்க்கடம்பு, நெட்டிலிங்கம், புலிநகம், பூவரசு, பெருமூங்கில், மகிழ், மஞ்சக்கடம்பு உள்ளிட்ட, 300 வகையான மரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றுக்கும் படங்களுடன் விளக்கமும் அளிக்கப் பட்டுள்ளது. மேலும், 300 மரங் களுக்கும், 24 மணி நேரமும் தண் ணீர் செல்லும் வகையில் சொட்டு நீர் பாசன வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2017-ம் ஆண்டு தொடங்கி, தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவுற்றுள்ளன. வரும், 16-ம் தேதி (நாளை) இந்த புதிய மரப் பூங்கா திறக்கப்படவுள்ளது. இங்கு அறிய தாவரங்களைப் பொதுமக்கள் பார்க்கலாம். வன ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக் கும் இந்த மரப்பூங்கா பயனுள் ளதாக இருக்கும்.

மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து, அனைத்து அரிய மர வகைகளை யும் தேடிக்கொண்டு வந்து இங்கு நட்டு வைக்க இருக்கிறோம். பிற்காலத்தில் இந்த மரப்பூங்கா மாநிலத்திலேயே அரிதான ஒன் றாக இருக்கும்.

பூங்காவைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கட்டண அனுமதி குறித்து அரசுதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x