Published : 21 Jul 2018 10:25 AM
Last Updated : 21 Jul 2018 10:25 AM

வனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்பாக விரைவான தகவல் பரிமாற்றத்துக்கு கைபேசி செயலி உருவாக்கம்: பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய அரசு தகவல்

வனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்பாக விரைவாக தகவல் பரிமாற்றம் செய்ய கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியைச் சேர்ந்த ராஜீவ் தத்தா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “உத்ராகண்ட், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநில வனப் பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அதை தடுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு வழங்கிய உத்தரவில் கூறியிருப்பதாவது:

வனங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தேசிய வனத் தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும். வனத் தீ மேலாண்மை திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த அந்தந்த மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும். மாவட்டம் மற்றும் கோட்ட அளவில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வனங்களில் ஏற்படும் தீ தொடர்பான எச்சரிக்கைகள் செயற்கைக்கோள் மூலமாக வழங்கும் முறையை வலுப்படுத்த வேண்டும். மாநில அளவில் வன தீ தடுப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள தலைமை வனப் பாதுகாவலர் பதவியில் இருப்பவரை, மாநில தலைமை அலுவலகத்தில் நியமிக்க வேண்டும். அவர் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், இந்த வழக்கு டன் சேர்த்து, கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாகவும் விசாரிக்க மனுதாரர் ராஜீவ் தத்தா மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக மத்திய சுற் றுச்சூழல் அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்ப தாவது:

குரங்கணி தீ விபத்து சம்பவத் துக்கு பிறகு, அனைத்து மாநில வனத்துறையும் உஷார்படுத்தப் பட்டு, பொதுமக்கள் வனங்களுக் குள் வருவதை முறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனத் தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு 2017-18 நிதி யாண்டில் ரூ.1 கோடியே 5 லட்சம், நடப்பு நிதியாண்டில் ரூ.1 கோடியே 75 லட்சத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மேலும், தீ விபத்து தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் களை உடனுக்குடன் தெரிவிக்க தனி இணையதளம் உருவாக் கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத் திலும் வன தீ தடுப்பு பணிகளைக் கண்காணிக்க தலைமை வனப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். அவர்கள் முறையாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளனர். தீ தொடர்பான தகவல் களை விரைவாக பரிமாறிக்கொள்ள கைபேசி செயலியும் உருவாக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், அதன் தலைவர் ஏ.கே.கோயல் மற்றும் உறுப்பினர்கள் முன்பு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது. குரங்கணி தீ விபத்து தொடர் பான அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள விவரங் களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x