Published : 21 Oct 2024 10:57 AM
Last Updated : 21 Oct 2024 10:57 AM
மேட்டூர்/தருமபுரி: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு கடந்த சிலநாட்களாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18,384 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 15,929 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பை விட, தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 96.90 அடியாகவும், நீர் இருப்பு 60.89 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 4 நாட்களாக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT