Published : 23 Jun 2018 07:35 AM
Last Updated : 23 Jun 2018 07:35 AM

ரூ.10,000 கோடி விற்றுமுதல் எட்டியது மார்கதரிசி சிட்பண்ட்

மார்கதரிசி சிட் பண்ட் நிறுவனம் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி விற்றுமுதல் எட்டியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மார்கதரிசி சிட் பண்ட் நிறுவனம் 1962-ம் ஆண்டில் ராமோஜி ராவ் என்பவரால் ஹைதராபாத் நகரில் தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் சைலஜா கிரோன் என்பவர் தலைமையில் 26 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிறுவனத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் 105 கிளைகள் உள்ளன. 1994-95-ம் நிதியாண்டில் ரூ.382 கோடி விற்றுமுதலை ஈட்டிய இந்நிறுவனம், 2017-18-ம் நிதியாண்டில் ரூ.10,204 கோடி விற்றுமுதலை எட்டியுள்ளது.

இவ்வளர்ச்சி குறித்து சைலஜா கூறும்போது, "எங்கள் நிறுவனம் முழுமையான தொழில் நேர்மையை கடைபிடிக்கிறது. உயர்தரமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது கொண்டுள்ள மதிப்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காக எங்களின் அனைத்து கிளைகளிலும் இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது.

மார்கதரிசி ஏராளமான நிதித் திட்டங்களை கொண்டுள்ளது. கனவு இல்லம் கட்ட, சுய தொழில் தொடங்க, பிள்ளைகளை உயர் கல்விக்காக வெளிநாடு அனுப்ப, திருமணம் செய்ய, மகிழ்ச்சியாக ஓய்வு காலத்தை கழிக்க இப்படி அனைத்து பிரிவினரின் கனவுகளையும் நனவாக்கும் வகையில் மார்கதரிசி செயல்படுகிறது. இதுவரை 50 லட்சம் பேருக்கு சேவையாற்றியுள்ளது.

வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்கதரிசி நிறுவனம் மக்களின் சிறந்த நம்பிக்கையான முதலீட்டு தேர்வாக உள்ளது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரூ.20 ஆயிரம் கோடி விற்றுமுதலை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று சைலஜா கூறினார்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x