Published : 16 Jun 2018 08:40 AM
Last Updated : 16 Jun 2018 08:40 AM

உதகை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆனது: பேருந்து பராமரிப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

உதகை அருகே அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மந்தாடா பகுதியில் 50 அடி பள்ளத்தில் நேற்று முன்தினம் அரசுப் பேருந்து உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உதகை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கோவையில் சிகிச்சை பெற்றுவந்த நடத்துநர் பிரகாஷ் (38), நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

விபத்து நடந்த பகுதியை போக்குவரத்து இணை ஆணை யர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி ராஜ், போக்குவரத்து ஆய்வாளர் சத்யகுமார் ஆகியோர் உடனிருந் தனர்.

சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, உள்ளூர் பொதுமக்களும் அரசுப் பேருந்து போக்குவரத்தையே நம்பியுள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான பேருந்துகூட மிகவும் பழையது என்பதால், பேருந்துகளை பராமரித்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x