Published : 23 Aug 2014 10:12 AM
Last Updated : 23 Aug 2014 10:12 AM

பிரான்ஸ் பெண்ணுக்கு புதுச்சேரி இளைஞருடன் திருமணம்: முதலில் மோதிரம், அடுத்து தாலி

பிரான்ஸை சேர்ந்தவர் ப்ளார். இவருக்கு இந்திய கலாச்சாரம் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்தார். பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளுடன் இந்திய கலாச்சாரம் பற்றி படித்தார்.

பிறகு புதுவையிலேயே பரதநாட்டிய பயிற்சி நிலையம் அமைத்தார். இவருக்கும் புதுச்சேரி கந்தப்ப முதலி வீதியைச் சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற கட்டிட ஒப்பந்ததாரர் விஜய் லோடிக்கும் காதல் ஏற்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்ட படி இருவரும் வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.

ப்ளார் விருப்பப்படி மாப் பிள்ளை பெண் ஊர்வலத்துக்காக 2 மாடுகள் பூட்டப்பட்ட வில் வண்டி விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூரில் இருந்து வரவழைக் கப்பட்டது. 1 நாள் வாடகையாக ரூ. 17 ஆயிரம் தரப்பட்டது.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த வண்டியில் மணமக்கள் மணக்கோலத்துடன் அமர வைக் கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். புதுச்சேரி கடற் கரை சாலையிலுள்ள கப்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ் தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து இந்து முறைப்படி மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டினார். திருமணம் முடிந்ததும் மணமக்கள் பிரெஞ்சு வழக்கப்படி ஒருவரையொருவர் அன்புடன் முத்தமிட்டு கொண்டனர். பின்னர், திருமண விருந்துக்கு பழங்கால முறைப்படி ‘வில்’ வண்டியில் சென்றனர்.

இந்திய கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் வகையில் நடந்த இந்த திருமணத்தை பலரும் அதிசயமாக பார்த்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x