Published : 07 Jun 2018 10:21 AM
Last Updated : 07 Jun 2018 10:21 AM

படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் டார்ஜிலிங் பயணம்

தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், நேற்று மாலை டார்ஜிலிங் புறப்பட்டு சென்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே இன்று வெளியாகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்குக்கு புறப்பட்டு சென்றார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு அங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் இன்று முதல் படமாக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x