Published : 11 Sep 2024 08:57 AM
Last Updated : 11 Sep 2024 08:57 AM

15 விரைவு ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயிலில் 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும் இணைக்கப்பட உள்ளன. ஈரோட்டில் இருந்து ஜன.20-ம் தேதி முதலும், சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.23-ம் தேதி முதலும் கூடுதல் பொது பெட்டி சேர்க்கப்படும்.

இதுபோல, ஜன.16 முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் - ஹைதராபாத், நாகர்கோவில், திருவனந்தபுரம், ஆலப்புழா, மைசூரூ, பாலக்காடு விரைவு ரயில் உட்பட 14 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுபெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படவுள்ளன. அதேநேரத்தில், 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் குறைக்கப்படவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x