Published : 18 Aug 2024 07:53 AM
Last Updated : 18 Aug 2024 07:53 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 23 வயது இளம் பெண்ணை, தெற்கு கோட்டையைச் சேர்ந்த கவிதாசன் (25), அவரது நண்பர்கள் திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று முதலுதவி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற தனக்கு, அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தவறிய மருத்துவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது, சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதற்கான காரணம் என்னஎன்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவஅலுவலருக்கு, ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி என்.அழகேசன் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT