Published : 27 Jul 2024 05:27 AM
Last Updated : 27 Jul 2024 05:27 AM
சென்னை: தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர்நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பட்ஜெட்டில் தங்கள் மாநிலத்தின் பெயரை குறிப்பிடத் தவறியதே இதற்கு காரணம் என அவர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட் மற்றும் நிதி அமைச்சகத்தின் நோக்கங்கள் பற்றிய புரிதல் இல்லாததே இதற்கு காரணம்.
மாநில தேவைகளை நிவர்த்திசெய்வதற்கும், வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், நிதி ஆயோக்கூட்டம் முக்கியமானது. பிரதமர்மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம்மாநில தேவைகளை பூர்த்தி செய்வதையும், மக்களின் நலனுக்கான வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் மீதான தனிப்பட்ட விரோதத்தால், இந்த கூட்டத்தை தமிழகம், தெலங்கான முதல்வர்கள் புறக்கணிப்பதாக தெரிகிறது. இது போன்றசெயல்பாடுகள் மாநில மக்கள்நலனை புறக்கப்பணிப்பதாகும். நிதி ஆயோக் கூட்டங்களில்பங்கேற்பதால், மக்களின் நீண்டகால நலனை உறுதி செய்ய முடியும். எனவே, இரு மாநில முதல்வர்கள் அரசியல் நாடகங்களைநடத்தாமல், முழு ஒத்துழைப்பு வழங்கி தங்களது மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT