Published : 24 Jun 2024 09:04 AM
Last Updated : 24 Jun 2024 09:04 AM

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் விரைவில் புத்தக பூங்கா

கோப்புப்படம்

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் விரைவில் புத்தக பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், ஆலந்தூர், விமான நிலையம், திருமங்கலம், பரங்கிமலை உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையங்களில் ஒன்றான சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக, ஒரு புத்தக பூங்கா விரைவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து நூலகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் அடங்கிய புத்தக பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்த நிலையத்துக்கு வரும் பயணிகள் விரைவில் புத்தகத்தை எடுத்து படிக்கலாம். இந்த புத்தக பூங்காவில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகளும், இங்கு வருபவர்கள் அமர்ந்து புத்தகங்கள் படிக்க வசதியான இருக்கைகளும் அமைக்கப்படும். மேலும், புத்தகங்களை காட்சிப்படுத்தவும் விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் புத்தக பூங்காவின் வரவேற்பை பொருத்து, டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மற்றொரு புத்தக பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x