Published : 28 May 2024 06:06 AM
Last Updated : 28 May 2024 06:06 AM

‘குரல் கேட்போம்.. குறை களைவோம்..’ - திருப்போரூரில் புதிய செயல்திட்டம்: கிராமம் கிராமமாக எம்எல்ஏ பாலாஜி பயணம்

எம்எல்ஏ பாலாஜி

திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில் ‘குரல் கேட்போம்.. குறை களைவோம்..’ என்கிற செயல்திட்டத்தை இம்மாதம் 3-ம் தேதி தொகுதியின் எம்எல்ஏ பாலாஜி தொடங்கியுள்ளார்.

இத்திட்டம் குறித்து எம்எல்ஏ பாலாஜி கூறியதாவது: இதுவரை 33 கிராம பஞ்சாயத்துகளில் மக்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்கிறேன். பின்னர் அன்று இரவு அந்த கிராமத்திலேயே தங்குகிறேன். மறுநாள் காலை அந்த கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள 3 அல்லது 4 கிராமங்களுக்கு சென்று குறை கேட்கிறேன்.

அப்போது அங்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் ஆளுமைகள், பொதுநல செயல்பாட்டாளர்களை சந்தித்து அந்த பகுதியில் அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகள் பற்றி கேட்டறிந்து வருகிறேன்.

கிராமம் தோறும் சேகரிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை களை துறைவாரியாக பிரித்து,அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் வழங்கி மக்களுக்கு உரிய தீர்வை தரும் வகையில் இப்பணியை மேற்கொண்டுள்ளேன்.

இதன் ஒருபகுதியாக கடந்த மே 22-ம் தேதி மின்துறை குறித்த மக்கள் கோரிக்கை தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டு தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடுத்தடுத்தாக போக்குவரத்து துறை, உணவு பொருள் வழங்கல் துறை என துறைவாரியான கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி அதில் மக்களின் தேவைகள் குறித்த அறிக்கையை அளிக்க திட்டமிட்டுள்ளேன்.

மக்களின் வாழ்விடத்தில் தங்கி அவர்கள் நிலையை அறிவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அதுபற்றி கேட்பதுதான் முதல்நிலை பணியாகும். இது பெரும்பாலும் நடப்பதில்லை என்ற மக்களின் எண்ணத்தை உணர்ந்து இச்செயல்திட்டத்தை முன்னெடுத்துள் ளேன்.

இதற்கான முனைப்பை எனக்களித்த விசிக தலைவர் திருமாவளவன், முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோருக்கும் இதற்கு ஒத்துழைப்பை நல்கிய திமுக, விசிக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும், பல தரப்பட்டஉணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும் நம்பிக்கையோடு ஆதரவளிக்கும் திருப்போரூர் மக்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x