Published : 10 May 2024 05:04 AM
Last Updated : 10 May 2024 05:04 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரை பகுதியில்நேற்று கடல் சுமார் 100 அடி தொலைவுக்கு திடீரென உள்வாங்கியது.
தென் தமிழக கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கதடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் நேற்று கடல் திடீரென சுமார் 100 அடி தொலைவுக்கு உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால் கடல் பகுதியில் உள்ள பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
அப்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள், ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தனர். குறிப்பாக வழுக்கும் தன்மை கொண்ட பாசி படிந்த பாறைகள் மீது தாவிச் சென்று குளித்தனர்.
இதையடுத்து, பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம், ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம்’ என காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
அதேநேரத்தில், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களை முன்னிட்டு ஓரிரு நாட்கள் கடல் சீற்றத்துடன் காணப்படுவதும், சில சமயங்களில் உள்வாங்கிக் காணப்படுவதும் சகஜமான நிகழ்வுதான் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT