Published : 30 Apr 2024 04:57 AM
Last Updated : 30 Apr 2024 04:57 AM
சென்னை: தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. இவை மூலம் தமிழகத்துக்கு தினமும் 7,171 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் தினமும் 5,000 முதல் 5,500 மெகாவாட் மின்சாரமே வழங்கப்படுகிறது.
கூடங்குளம், வல்லூர், நெய்வேலி நிலக்கரி அனல்மின்நிலையங்களில் முழு அளவுக்குமின்னுற்பத்தி செய்யப்படவில்லை. இதனால், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 4,500 மெகாவாட் வரை வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி தொடங்கியதையடுத்து, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தினமும் 5,200 மெகாவாட் வரை மின்சாரம் வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT