Last Updated : 06 Apr, 2018 09:08 PM

 

Published : 06 Apr 2018 09:08 PM
Last Updated : 06 Apr 2018 09:08 PM

பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்ததால் பதிலுக்கு அவர் காலில் விழுந்த கிரண்பேடி

பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்ததால் பதிலுக்கு அவர் காலில் விழுந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் இன்று மாலை ஜிப்மரில் நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மருத்துவ ஆய்வு செய்யும் முகாமுக்கு 12 மணிக்கு வரவேண்டிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்காக 11 மணியில் இருந்து பெண் துப்புரவாளர்கள் காத்திருந்தனர். அப்போது தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக ஜிப்மர் சென்றார்.

பின்னர் மருத்துவ முகாமை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைத்தார். ஆளுநர் அனைவருக்கும் மருத்துவ அடையாள அட்டையை வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்.

அந்நிகழ்வில் ஆளுநர் கிரண்பேடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் கிரண்பேடி காலில் விழுந்தார். அதற்கு, துப்புரவுப் பணி செய்து நகரைத் தூய்மையாக வைத்திருக்கும் உங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என்று துப்புரவுப் பணியாளர் காலில் கிரண்பேடி விழுந்தார். ஏற்கெனவே ஆளுநர் கிரண்பேடி பதவியேற்ற நிகழ்வில் எம்எல்ஏ விஜயவேணி காலில் விழுந்தவுடன் அவரும் பதிலுக்கு அவர் காலில் விழுந்துள்ள நிகழ்வும் நடந்துள்ளது.

அதையடுத்து இலவச மருத்துவ சேவை பெற மருத்துவ அட்டைகளை 250 பேருக்கு வழங்கினார். புதுச்சேரி தூய்மையாகவும் அழகாவும் இருப்பதற்கு துப்புரவுப் பணியாளர்களின் சேவையே முக்கியக்காரணம் என்று குறிப்பிட்டார்.

ஜிப்மர் இயக்குநர் விஷ்ணுபட் பேசுகையில், இலவச மருத்துவ சேவைகளை துப்புரவுப் பணியாளர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x