Published : 21 Apr 2018 10:30 AM
Last Updated : 21 Apr 2018 10:30 AM

முன்னாள் தலைமை செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், மாரடைப்பால் நேற்று காலமானார்.

முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்தவர் டி.வி. வெங்கட்ராமன் (83). நேற்று அதிகாலை 4 மணி அளவில் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர் அதிகாலை உயிரிழந்தார். 1958-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த இவர், 36 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். கடைசியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய இவர் 1994-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x