Published : 16 Apr 2024 06:05 AM
Last Updated : 16 Apr 2024 06:05 AM

திருவண்ணாமலையில் இன்று ராஜ்நாத் சிங் பிரச்சாரம்: தென்காசியில் ஜெ.பி.நட்டா ரோடு ஷோ

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கிறார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, பாமக தலைவர் ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திருவண்ணாமலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ரோடு ஷோ பிரச்சாரத்தில் ஈடுபடஉள்ளார். இதற்காக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஹெலிகாப்டரில் வந்து, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, கிரிவலப் பாதை (செங்கம் சாலை) வழியாக வந்து, காமராஜர் சிலையில் இருந்து ரோடு ஷோ பிரச்சாரத்தை பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கவுள்ளார்.

திருமஞ்சன கோபுர வீதி, திருவூடல் வீதி, கடலைக்கடை சந்திப்பு,தேரடி வீதி வழியாக காந்தி சிலைஇருந்த இடத்தில் ரோடு ஷோ நிறைவு பெறுகிறது. அங்கு ராஜ்நாத் சிங் பேசுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகிறது. ரோடு ஷோ பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் சென்னைக்கு திரும்புகிறார்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி, ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து பாதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.

தென்காசியில் ஜெ.பி.நட்டா: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தென்காசியில் இன்று ரோடு ஷோ மூலம் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதற்காக, இன்று காலைஹெலிகாப்டர் மூலம் இலஞ்சிராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு வரும்ஜெ.பி.நட்டா, அங்கிருந்து காரில்குற்றாலம் வழியாக தென்காசிஆசாத் நகருக்கு வருகிறார். அங்கிருந்து மதியம் 2.20 மணியளவில் ‘ரோடு ஷோ’ பிரச்சாரத்தைதொடங்குகிறார்.

தென்காசி பழைய பேருந்து நிலையம் வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் மீண்டும்இலஞ்சியில் இருந்து ஹெலிகாப்டரில் திரும்பிச் செல்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x