Published : 10 Apr 2024 05:30 AM
Last Updated : 10 Apr 2024 05:30 AM
மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள காவல் பணியாளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோரை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி ரிப்பன் கட்டிட வளாக கூட்ட அரங்கில், மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர்,தேர்தல் பொது பார்வையாளர்கள் டி.சுரேஷ், கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, காவல் பார்வையாளர்கள் உதய்பாஸ்கர் பில்லா, சஞ்சய் பாட்டியா,கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஆர்.லலிதா, வி.ஜெயசந்திர பானு ரெட்டி, ஜி.எஸ்.சமீரன், ஷரண்யா அறி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நிகழ்வில், மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இந்த தேர்தலில் நுண் பார்வையாளர்கள் 923 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். காவல் பணிகளில் 5 வாக்குச்சாவடிகள் உள்ள மையத்துக்கு ஒரு காவலர், 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள மையத்துக்கு 2 காவலர்கள் என 9,277 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்குச்சாவடிகளுக்கு 19,419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 611 பதற்றமான வாக்குச்சாவடிகள், 23 சவாலான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் 135 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 769 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கான நுண் பார்வையாளர்கள் 963 பேர் கணினி குலுக்கல்முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பூத்சிலிப்கள் இதுநாள் வரை 11,56,524 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களிடம் 67 வாக்குப்பதிவு குழுக்கள் மூலம் வீடுவீடாகச் சென்று வாக்குப்பதிவு செய்யும் பணிநடைபெற்று வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT