Published : 30 Mar 2024 07:52 AM
Last Updated : 30 Mar 2024 07:52 AM
புதுக்கோட்டை: அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற விதி உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெளிவுபடுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று நடைபெற்ற சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் அறிமுக கூட்டத்தில் அவர்பேசியது:
அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற விதி உள்ளது. ஆனால், ஏதோ ஒரு பிழையை கண்டுபிடித்ததாகவும், அதற்கான தொகை, வட்டி, அபராதம் என ரூ.1,821 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை முடக்கும் எண்ணத்தில்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய கட்சியையும் முடக்கிவிட்டு, மாநில கட்சித் தலைவர்களையும் அச்சுறுத்திவிட்டு நாட்டில் ஒரே கட்சியாக பாஜக மட்டுமேஇருக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம்.
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் உயிரோடு இருக்காது. எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றவும், ஏழை எளியோருக்கு திட்டங்களை செயல்படுத்தவும் இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை, வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT