Published : 22 Mar 2024 01:20 PM
Last Updated : 22 Mar 2024 01:20 PM

வாக்காளர்களுக்கு உதவ ‘ஓட்டர் ஹெல்ப் லைன்’ செயலி

ஓட்டர் ஹெல்ப் லைன் செயலி.

பழநி: ‘ஓட்டர் ஹெல்ப் லைன்’ மொபைல் செயலி மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை அறியலாம்.

தமிழகத்தில் ஏப்.19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை வாக்காளர்களுக்காக செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு உதவ ‘ஓட்டர் ஹெல்ப் லைன்’ செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.

மொபைல் பிளே ஸ்டோரில் ‘Voter Help Line’ செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அதில் வாக்காளர் பெயர் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்க்கை, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகளை எளிதில் அறியலாம்.

பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை மாற்றுவதற்காக தனியாக விண்ணப்பம் கொடுக்கப் பட்டுள்ளது. இலவச எண் 1950 மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய முடியும். இது மட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் ww.nvsp.in என்ற இணையதளத்தில் பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், இதற்கு முன்பு நடந்த தேர்தல் முடிவுகள், பங்கேற்ற கட்சிகளின் பெயர்கள், தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள், வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் அறியலாம். தற்போதைய தேர்தல் நிலவரம், தேர்தல் தொடர்பான செய்திகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x