Published : 18 Mar 2024 06:06 AM
Last Updated : 18 Mar 2024 06:06 AM
சென்னை: சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்றும், நாளையும் ( மார்ச் 18,19) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் பொன்னேரி -மீஞ்சூர் இடையே சீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.30, 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்,எண்ணூர் - கும்மிடிப்பூண்டி இடையேபகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படவேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 10.55 மணிக்கு புறப்படவேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - எண்ணூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்,கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
திருப்பதி ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி காரணமாக, சில மெமு விரைவு ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு மார்ச் 18-ம் தேதிகாலை 9.50 மணிக்கு புறப்படும் மெமுவிரைவு ரயில், ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படஉள்ளது.
திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 18-ம் தேதி மதியம் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு விரைவு ரயில்,திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு செல்லும்.
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT