Published : 07 Feb 2018 10:06 AM
Last Updated : 07 Feb 2018 10:06 AM

காவல் அதிகாரி குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: ராமேசுவரம் தலைமை காவலர் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் காவல் அதிகாரியின் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமைக் காவலர் மீது போலீஸார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

ராமேசுவரத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலராக பணிபுரிபவர் சரவணன் (42). ராமேசுவரத்துக்கு வரும் உயர் அதிகாரிகள், அவர்களது உறவினர்களுக்கு ராமநாத சுவாமி கோயிலில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்வது, ஹோட்டல்களில் அறைகள் பதிவு செய்வது இவரது முக்கியப் பணியாகும்.

இவர் ராமேசுவரம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இங்கு வசிக்கும் மற்றொரு காவல் அதிகாரியின் 10 வயது சிறுமிக்கு சரவணன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் சிறுமியின் பெற்றோர் ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் சரவணன் மீது அளித்த புகாரின்பேரில், அவரை கைது செய்ய முயன்றனர். இதை அறிந்த சரவணன் தலைமறைவானார்.

இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போஸ்கோ) நேற்று வழக்குபதிந்த ராமேசுவரம் போலீஸார் காவலர் சரவணனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x