Published : 07 Feb 2018 01:19 PM
Last Updated : 07 Feb 2018 01:19 PM

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

 கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட நிலையில்,அவரால் நியமனம் செய்யப்பட்ட பதிவாளர் (பொறுப்பு)  வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பேராசியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று அவரை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நாளை உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் ஆட்சி மன்றக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கைது செய்யப்பட்ட கணபதி நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 65 வயதுக்குட்பட்டவர்களே பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் கணபதிக்காக விதி திருத்தப்பட்டதாகவும் 66 வயதான அவரை நியமிப்பதற்காக 70 வயது வரை நியமிக்கலாம் என தளர்த்தப்பட்ட கணபதி நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தவிர கணபதி பலரை நியமித்ததிலும் இதே போன்று விதிமீறல் உள்ளதாகவும், கணபதியின் மனைவி சொர்ணலதா மூலமும் நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கணபதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தற்போது பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு)  வனிதா அறையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x