Published : 11 Feb 2018 06:57 AM
Last Updated : 11 Feb 2018 06:57 AM

குரூப் 4 தேர்வு 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில் இன்று நடக்கிறது. இதில், 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுத 20 லட்சத்து 69,274 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 6,962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து தேர் வுக் கூடங்களும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த தேர் வில் தனித்துவமான விடைத் தாள் வழங்கப்படுகிறது. கை பேசி, கால்குலேட்டர் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x