Published : 27 Dec 2023 05:35 AM
Last Updated : 27 Dec 2023 05:35 AM
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் தவித்த பயணிகளுக்கு புதுக்குடி மேலூர் கிராம மக்கள் உணவு வழங்கினர்.
இந்நிலையில், புதுக்குடி மக்களைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு ரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், "THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS" என மகாத்மா காந்தி கூறியதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புஉணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT