Published : 22 Apr 2014 10:53 AM
Last Updated : 22 Apr 2014 10:53 AM

தமிழகத்தின் மொத்த மின்நுகர்வில் 20 சதவீதத்தை சென்னை மட்டுமே பயன்படுத்துகிறது

சென்னையின் மின்நுகர்வு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து 20 சதவீதமாக உள்ளது. மேலும் மாநிலத்தின் மின்நுகர்வின் மொத்த அளவில் ஐந்தில் ஒரு பங்கை சென்னை மட்டுமே பயன்படுத்துகிறது என்று தமிழ்நாடு உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO)வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மின்நுகர்வு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், மின்நுகர்வின் உச்சக்கட்ட நேரமாக கருதப்படும் மாலை முதல் இரவு நேரம் வரை, மாநிலத்தின் மின் நுகர்வு 1,500 மெகாவாடிலிருந்து 3,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கோடைவெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஏ.ஸி, ஏர்கூலர் போன்றவற்றின் உபயோகம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.

மேலும் தொழிற்சாலைகள் மொத்த மின்நுகர்வில் 37 சதவீதமாகவும், வணிகத்துறைகளில் 11.50 சதவீதம் உபயோகப்படுத்துகின்றன. இதற்கு அடுத்தப்படியாக வீட்டு உபயோக சாதனங்களின் பயன்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் 23 சதவீதம் முதல் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

மறுபுறம் விவசாய துறைக்கு பயன்படும் மின்நுகரின் பயன்பாடு 27 சதவீதத்திலிருந்து சதவீதமாக குறைந்துள்ளது.

சென்னையின் மின் நுகர்வு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து 20 சதவீதமாக உள்ளது. மேலும் மாநிலத்தின் மின்நுகர்வு மொத்த மின் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கை சென்னை மட்டுமே பயன்ப்படுத்திகொள்கிறது. மின்நுகரின் பயன்பாடு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் ஆகிய மாதங்களில் உயர்ந்து, ஜூன் மாதத்தில் இந்த மின்நுகர்வு உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு, தமிழகத்தின் மின்நுகர்வு 73,374 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இதில் சென்னையின் மின்நுகர்வு பயன்பாடு மட்டும் 52,785 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது.

ஆனால் 2011 ஆம் ஆண்டுக்கு ஒப்பிடும் போது தமிழகத்தின் மொத்த மின் நுகர்வு கடந்த இரண்டு ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது, இதன் பயன்பாடு தற்போது 77,637 மெகா வாட்டாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x