Published : 09 Dec 2023 06:16 AM
Last Updated : 09 Dec 2023 06:16 AM

மருத்துவர் வி.மோகனுக்கு லஷ்மிபத் சிங்கானியா விருது: குடியரசு தலைவர் வழங்கினார்

புகழ்பெற்ற நீரிழிவு நோய் மருத்துவர் வி.மோகனுக்கு, லக் ஷ்மிபத் சிங்கானியா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

சென்னை: நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியதை பாராட்டும் வகையில் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் வி.மோகனுக்கு லஷ்மிபத் சிங்கானியா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். ஐஐஎம் லக்னோ மற்றும் புதுடெல்லியில் உள்ள தொழில்துறை கூட்டு நிறுவனமான ஜேகே அமைப்பு சார்பில் 2022-23 ஐஐஎம் லக்னோ தேசிய தலைமை விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இதில், ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தலைவர்’ என்ற பிரிவில் லஷ்மிபத் சிங்கானியா விருதுக்கு டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் வி.மோகன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, லஷ்மிபத் சிங்கானியா விருதை வழங்கி கவுரவித்தார். இந்த பிரிவில் விருது பெறும் இரண்டாவது இந்திய மருத்துவர் என்ற பெருமையையும் டாக்டர் மோகன் பெற்றுள்ளார். இதுகுறித்து மருத்துவர் மோகன் கூறுகையில், ‘கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சர்க்கரைநோய் குறித்த எங்கள் ஆராய்ச்சிக்கு இந்த மதிப்புமிக்க விருதுகிடைத்திருப்பது என்பது எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x