Published : 30 Jan 2018 10:13 PM
Last Updated : 30 Jan 2018 10:13 PM

தமிழகம் முழுவதும் 88 ஆய்வாளர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் 88 காவல் ஆய்வாளர்களுக்கு டி.எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலர் பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 1996-ம் ஆண்டு உதவி ஆய்வாளர்களாக தேர்வான போலீஸார் தற்போது ஆய்வாளர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களில் 88 பேருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் சென்னையைச் சேர்ந்த பெண் ஆய்வாளர் இம்மாகுலேட் தேவ்டா, சிறைத்துறை உளவுப்பிரிவு ஆய்வாளர் சங்கர நாராயணன், எஸ்பிசிஐடி ஆய்வாளர் மேத்யூ டேவிட், தானாஜி, அம்பத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கந்தக்குமார், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன், சச்சிதானந்தம் ஓசிஐயூ ஆய்வாளர் சென்னை, ரயில்வே ஆய்வாளர், சென்னை ராதாகிருஷ்ணன், அபிராமபுரம் காவல் ஆய்வாளர் ராஜா, தரமணி ஆய்வாளர் ஜெயக்குமார், காவல்கட்டுப்பாட்டறை ஆய்வாளர் செல்லமுத்து, நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், எஸ்பிளனேடு ஆய்வாளர் பாலகிருஷ்ண பிரபு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் ராமச்சந்திர மூர்த்தி, குமாரவேலு, நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் மகிமைவீரன், எஸ்பிசிஐடி ஆய்வாளர் அருளரசு, கோர்செல் சிஐடி ஆய்வாளர் கந்தன், எஸ்பிசிஐடி ஆய்வாளர் செம்பேடு பாபு, சிபிசிஐடி ஆய்வாளர் சரவணன், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தனபாலன், வளசரவாக்கம் ஆய்வாளர் குமரன், எஸ்பிசிஐடி ஆய்வாளர் சென்னை சுரேஷ் குமார், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மெல்வின் ராஜா ஆகியோர் உட்பட 88 ஆய்வாளர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x