Published : 05 Nov 2023 04:08 AM
Last Updated : 05 Nov 2023 04:08 AM

ஜார்க்கண்டில் உயிரிழந்த நாமக்கல் மருத்துவ மாணவர் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி

நாமக்கல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நாமக்கல் மருத்துவ மாணவரின் இறுதிச் சடங்கு நாமக்கல்லில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள, பாலக்காடு சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மதியழகன். இவரது மகன் மதன் குமார் (26), ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள ராஞ்சி ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு தடயவியல் மருத்துவ நிபுணர் தொடர்பான படிப்பு பயின்று வந்தார்.

மருத்துவ மாணவர் மதன் குமார்

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அவர் தங்கி இருந்த பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நேற்று காலை நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது உடலுக்கு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x