Published : 07 Oct 2023 06:06 AM
Last Updated : 07 Oct 2023 06:06 AM
கடலூர்: பாமகவின் கடலூர் வடக்கு மாவட்டபொதுக்குழு கூட்டம் முத்தாண்டிகுப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வடக்கு மாவட்டசெயலாளர் ஜெகன் தலைமைதாங்கினார். மேல்காங்கேயன் குப்பம் எழில்செல்வன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப் பினர்கள் முத்து.வைத்தியலிங்கம், வேங்கை சேகர், சக்திவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் இராஜேந்திரன், மருத்துவர் கௌரி சங்கர், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயபால், வடிவழகன், மாவட்ட அமைப்பு தலைவர் அரிராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாண்டவன்ராயன், மகளிர் அணி சிவகாமி, உமாமகேஸ்வரி, விஜய பார்வதி, ஒன்றிய செயலாளர்கள் மணிவாசகம், சிவக்குமார், செல்வகுமார், ஐயப்பன், சதாசிவம், நகர செயலாளர்கள் சார்லஸ், ஆனந்தன், வேங்கடத்தான், ஒன்றிய தலைவர்கள் தட்சிணா மூர்த்தி, தமிழ், கஜேந்திரன், தவபாலன், நகர தலைவர் சத்ய ராஜ், பேரூர் தலைவர் செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோதண்டராமன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ஆகியோ ரின் செயல் திட்டங்களை சிறப்புற செய்து, கடலூர் மக்களவைத் தொகுதி பாமகவின் கோட்டை என நிரூபிக்க அனை வரும் உறுதி ஏற்பது எனவும், இதற்காக ராம தாஸின் செயல் திட்டங்களை களப்பணியாளர்களும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மக்க ளிடம் நேரடியாக கொண்டு செல்லவேண்டும் எனவும் தீர்மானிக்கப் பட்டது.
மேலும், அக்.10 அன்று தலைவர் அன்புமணி ராமதாஸின் 55-வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி நடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனை மற்றும் அன்னதானம், மரக்கன்று நடுதல், ஆகியவற்றை நடத்துவது எனவும், முன்னதாக 8-ம் தேதி ரத்ததான முகாம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், என்எல்சி நிறுவனத் துக்காக இதுவரை நிலத்தை வழங்கியோருக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும், விக்கிரவாண்டி-கும்ப கோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதமாக நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT