Published : 20 Dec 2017 01:20 PM
Last Updated : 20 Dec 2017 01:20 PM

அதிமுகவின் உச்சகட்ட அநாகரீக அரசியல் போர்: ஜெ. வீடியோ குறித்து எஸ்.வி.சேகர் கருத்து

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியீடு "அதிமுகவின் உச்சக்கட்ட அநாகரீக அரசியல் போர்" என பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல் புதன்கிழமை அன்று வெளியிட்டார். சுமார் 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி உடை அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போன்ற காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோ பதிவு குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனக் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

"இந்த வீடியோவை பார்க்கும்போது ஒருபுறம் பரிதாபமாக இருக்கிறது. அதிமுகவின் உச்ச கட்ட அனாகரீக அரசியல் போர். ஆட்சியையும் கட்சியையும் மொத்தமா முடிச்சாச்சு" என்று பொருள்படும் வகையில் அந்த ட்வீட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் ஆண்ட திமுக, ஆளும் அதிமுக கட்சியையும், கட்சிப் பிரமுகர்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பதிவு செய்துள்ள ட்வீட் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x